சீனாவில் நேற்று (07) காலை உணரப்பட்ட நில அதிர்வை அடுத்து காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 95 பேரின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 130 பேர் காயமடைந்துள்ளனர்.
1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில் குறித்த பகுதியில் வெப்பநிலை இன்று அதிகாலை வேளையில் மறை 16 பாகை செல்சியஸாக நிலவக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அங்கு நேற்று மாலை மறை 8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்> யாழில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!