துபாயில் நடிகர் அஜித், கார் ரேஸிற்கான பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கார் விபத்திற்குள்ளானது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடிகர் அஜித் நடித்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது.
அண்மையில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி நடிகர் அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றார்.
அங்கு தனது அணியினருடன் அஜித் இருக்கும் காணொளி ஒன்று வைரலானது. இதேவேளை நேற்றையதினம் (07) கார் ரேஸிற்கான பயிற்சியில் அஜித் கலந்துகொண்டார்.
அப்பொழுது அவர் செலுத்திய கார் விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் நடிகர் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்>உ.பி.யில் சடலத்தின் கால்களில் கயிறு கட்டி இழுத்து செல்லும் மருத்துவ ஊழியர்கள்
https://www.youtube.com/@pathivunews/videos