அமெரிக்காவின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ (Presidential Medal of Freedom) விருதை காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்த விருதைப் பெற்ற முதல் காற்பந்தாட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் வளர்ச்சி, பாதுகாப்பு, சமூக பங்களிப்பு மற்றும் உலக அமைதி அல்லது தனிநபர்களின் சமூக செயற்பாடு போன்றவற்றை மையப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 19 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
ஹிலாரி கிளிண்டன், டென்சல் வாஷிங்டன் ஆகியோருடன் மெஸ்ஸிக்கும் இந்த விருதை வழங்குவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
இந்த விருதினை அமெரிக்க ஜனாதிபதி நேற்று வழங்கினார்.
இருப்பினும் இந்த விருது வழங்கல் நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் மெஸ்ஸி கலந்துகொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையும் படியுங்கள்>தங்கம் வைரமாகிய கதை-இராமநாதன் அர்ச்சுனாவின் பரபரப்பு பேட்டி