Wednesday, January 8, 2025
Homeஉள்ளூர்அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் உள்ள அவரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

300 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் உள்ள மோசடி, ஊழல், முறைகேடுகள் போன்றவற்றை கவனத்தில்கொள்ள எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் பல்வேறு விடயங்களில் சேறு பூசி நிகழ்ச்சி நடத்துவதை விடுத்து, ஒவ்வொரு நடவடிக்கையையும் விரிவாக நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்.

அதற்கான முழு அதிகாரத்தையும் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய நாடாளுமன்றத்தை மக்கள் வழங்கியிருப்பதால் எந்தவொரு சட்டத்தையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு இருக்கின்றது.

இதனடிப்படையில் முதலில் இலங்கையை இந்தியாவிடருந்து, சுத்தமாக்கி காட்டுமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்> உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments