Thursday, January 9, 2025
Homeசெய்திகள்முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்

முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்குமாறு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் தேசியம் சார் எண்ணம் கொண்டவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள் மாவீரர்கள் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு அது இராணுவ தேவைக்கு பயன்படுத்தாமல் இராணுவத்தினரின் வியாபார நடவடிக்கைக்கே பயன்படுத்தப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கியதை போன்று தங்களுடைய பிள்ளைகளின் கல்லறைகள் இருக்கின்ற காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து தருமாறு கோரி குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது


தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவித்து தருமாறு கோரிய கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடக ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் உறவுகள் தெரிவித்தனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments