Tuesday, January 7, 2025
Homeஉள்ளூர்5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

அம்பாறை தமன வனகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கி வந்த வீடொன்று நேற்று (5) அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் 29, 20 மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி நாணயத்தாள்களை அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி உட்பட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அவ்வீட்டில் மூன்று ஏ4 அளவிலான கடதாசிகள் அச்சடிக்கப்பட்டு கத்தரிக்கப்படாத 10 போலியான 5000 ரூபா நாணயத்தாள்கள் முதலியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படியுங்கள்>யாழில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments