Thursday, January 9, 2025
Homeஉள்ளூர்சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேகநபர்கள் கைது !

சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேகநபர்கள் கைது !

பழங்காலப் பொருட்களை திரட்டும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு மேற்கொண்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டுலுகம மற்றும் மீவலகந்த பகுதிகளில் நடைபெற்ற அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

அதில், 25 முதல் 56 வயதிற்கு இடையிலான சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில், பூஜை பொருட்கள் மற்றும் அகழ்வு பணியில் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்>தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments