Sunday, January 5, 2025
Homeஇந்தியாஅஜ்மீர் தர்கா உருஸ் விழா: புனித போர்வை அனுப்பிய பிரதமர் மோடி

அஜ்மீர் தர்கா உருஸ் விழா: புனித போர்வை அனுப்பிய பிரதமர் மோடி

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் என அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 813-வது உருஸ் கொண்டாட்டங்கள் அஜ்மீர் நகரில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின் மீது மலர்ப் போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இந்து மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி புனித போர்வையை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்>பிரிஸ்பேன் ஓபின் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்

https://x.com/narendramodi/status/1874867115238511073

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments