இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (03) இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு சிட்னியில் இடம்பெறவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இதுவரை நிறைவடைந்த 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது.
மற்றுமொரு போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது.
இந்தநிலையில், இந்தப் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவடையும்.
இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் அல்லது போட்டி சமநிலையில் நிறைவுற்றால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்>கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு!