பிரிஸ்பேன் ஓபின் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் ஜோகோவிச், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா உடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டி இன்று!