Monday, January 6, 2025
Homeஇந்தியாGPS கருவியால் டெல்லி ஏர்போர்ட்டில் ஸ்காட்லாந்து பெண் கைது!

GPS கருவியால் டெல்லி ஏர்போர்ட்டில் ஸ்காட்லாந்து பெண் கைது!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதற்காக ஸ்காட்லாந்தை சேர்ந்த மலையேறுபவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷிகேஷ் நோக்கிச் சென்ற ஹீதர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரிடம் இருந்து கார்மின் இன்ரீச் ஜிபிஎஸ் ஒன்று மீட்கப்பட்டது.

கைது செய்யப்படுவதற்கு முந்தைய தனது இன்ஸ்டாகிராமில் பதிவில், ஹீதர் நடந்ததை விவரித்துள்ளார்.

‘நான் ஸ்கேனர் வழியாக சோதனைக்கு என் கார்மின் இன்ரீச்சை ட்ரேயில் வைத்தேன், அந்த நேரத்தில் நான் உடனடியாக அதிகாரிகளால் ஓரமாக காத்திருக்க வைக்கப்பட்டேன்.

என்ன நடக்கிறது என்று யோசித்துக்கொண்டு காத்திருந்தேன். கார்மின் ஜிபிஎஸ் இங்கே சட்டவிரோதமானது என்றும் அவர்கள் என்னை காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்றும் எனக்கு இறுதியில் சொல்லப்பட்டது என்று ஹீதர் விவரித்துள்ளார்..


மேலும் தனது நாட்டு தூதரகத்தையும் தொடர்புகொண்டதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த கார்மின் இன்ரீச் கருவியை சுவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1885 ஆம் ஆண்டின் இந்திய தந்தி சட்டம் மற்றும் 1933 ஆம் ஆண்டின் வயர்லெஸ் டெலிகிராபி சட்டம் ஆகியவற்றின் கீழ் அரசாங்கத்தின் முன் அனுமதியின்றிஇ கார்மின் இன்ரீச் போன்ற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஜிபிஎஸ் சாதனங்களைப் பயன்படுத்துவதை இந்தியா தடை செய்துள்ளது.

இந்த பழைய விதிமுறைகள் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது வலுப்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு அபாயங்கள் மற்றும்இ உளவு பார்த்தலை தடுக்கவும்இ செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த தடையானது விதிக்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கியூபா, ஜார்ஜியா, ஈரான், வட கொரியா, மியான்மர், சூடான், சிரியா, தாய்லாந்து, வியட்நாம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 14 நாடுகளால் இந்த கருவி தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்>உருக்குலைந்த நிலையில் பெண்மணியின் சடலம் மீட்பு…!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments