ஜே.வி.பி கலகக்காரர்கள் எனது பாதுகாவலரை தாக்கலாம் என்ற பயத்தில் நான் எனது பாதுகாப்பிற்கு பொலிஸாரை கோரவில்லையென சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாhர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்லவேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது?
தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக மஹிந்த தரப்பு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அவ்வாறிருக்கையில் மஹிந்தவுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன கேள்வி எழுப்பியுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு அத்தகைய உயர் பாதுகாப்பு அவசியமற்றதாகும் என தெரிவித்த அவர்
மேலும் தெரிவிக்கையில் 1988 – 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதுளை மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த நான், நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்தபோது எனக்கான பாதுகாப்புசார் தேவைப்பாடுகள் என்னவென்பது பற்றி அரசாங்கம் என்னிடம் வினவியது.
அவ்வேளையில் அதிக எண்ணிக்கையான பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பாதுகாப்புப்பிரிவை நான் கோரியிருக்கலாம்.
இருப்பினும் நான் எனது பாதுகாப்புக்கு யாரும் தேவையில்லை என நிராகரித்துவிட்டேன்.
என்னுடைய இல்லத்துக்கு முன்பாக ஆயுதமேந்திய பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பின், ஜே.வி.பி கலகக்காரர்கள் அங்கு வந்து பொலிஸாரைத் தாக்கி, அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புண்டு.
எனவே பாதுகாப்பு பிரிவினர் இல்லாதிருந்தால், பிரச்சினைகளும் இருக்காது எனக் கருதினேன் என அவர் குறிப்பிட்டுள்ளாhர்