நாட்டின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தற்போதுள்ள பொறிமுறைக்கு உட்பட்டு தான் நிவாரண திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அதேவேளை நாணய நிதியம் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத நிபந்தனைகளை முன்வைக்கவுமில்லை.
நாட்டின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவம் தொடர்பில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், எம்மால் சில விடயங்களை மாற்ற முடியும் என தெரிவித்துள்ளாhர்