நபர் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
சிவில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு 1,500க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது