வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் குழுவொன்று முயல்கிறது என பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறனவர்கள் சமூக ஊடகங்களில் போலியான பதிவுடுவதாகவும் அவர் சிலவருடங்களிற்கு முன்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர் தினநிகழ்வுகள் குறித்த காணொளிகளை இந்த வருடம் பதிவிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
வடக்கில் 244 மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆனால் பத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் கொடிகள் இலச்சினைகள் காட்சிப்படுத்தப்பட்டன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூரலாம் ஆனால் விடுதலைப்புலிகளின் கொடிகளையோ இலச்சினையையோ காட்சிப்படுத்த முடியாது என்பதே அரசின் நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.