இந்திய 15 முதலீட்டாளர்கள் 15 பேர் யாழ் வரவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று (03) காலை ஆரம்பமானது .
மூன்று நாட்கள் நடைபெறும் வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் பல்வேறு முயற்சிகளை செய்து உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
இதற்கு இந்திய துணை தூதரகம் உதவிகளை செய்து வருகிறது.
உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்கள் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தால் உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி அடையும்.
சந்தை வாய்ப்புகள்,அதிகமாக கிடைக்கப்பெற்றால் உற்பத்திகளை அதிகரிக்க செய்வதுடன் உற்பத்திகளை அடுத்த தரத்திற்கு கொண்டு செல்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமாக அமையுமென அவர் தெரிவித்துள்ளார்
இந்திய தூதரகம் பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக கல்வி, கலாசாரம், வர்த்தகம் மற்றும் தூதரக உதவிகளை செய்து வருகிறது.
குறிப்பாக அடுத்த ஆண்டு 2025 ஆண்டு முதல் வர்த்தக நிகழ்வுகள், தொழில் முயற்சிகளுக்கு உதவிகளை செய்யவுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த சீன தூதுவரும் யாழ் மக்களுடன் இணைந்து வர்த்தகம் மற்றும் உற்பத்திதுறைகளில் பணியாற்ற சீனா விரும்புகின்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.