நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (4) மாலை. 05.30 மணி தொடக்கம் இன்று இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன
இதன் அடிப்படையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று (4) காலை 9.30 மணி முதல் இன்று மாலை 5 மணி வரை நடைபெநுகின்றது
இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பிலான வாக்கெடுப்பு மாலை 05 மணிக்கு இடம்பெறும்.
வாக்கெடுப்பு நிறைவடைந்ததும் மாலை 5.30 மணிக்கு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இன்று இரவு 9.30 மணிவரை விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது