Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்பகிரப்படாத பக்கங்கள் அம்பாறை நிந்தவூர் பெற்றேடுத்த புதல்வன்....!

பகிரப்படாத பக்கங்கள் அம்பாறை நிந்தவூர் பெற்றேடுத்த புதல்வன்….!

அம்பாறையில் நிந்தவூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் செல்வன் பொறிவெடி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த இவர் தவருதலான ஒரு வெடிவிபத்தின்போது தன் இரு கைகளையும் – இரு கண்களின் பார்வையையும் இழந்தவர்.
தற்போதைய நிலையில் ( 1992 காலப்பகுதி ) வட – தமிழீழத்தின் பல பகுதிகளில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டிருக்கும் அவரை , உங்களுக்கு அறியத்தருகின்றோம். விடுதலையின் சுவடாக …..
1985
” என்ரை காலை எடுத்துப்போட்டினம் அண்ணை ” – அந்த வைத்தியசாலையின் கட்டிடங்கள் முழுவதும் அதிரும் வண்ணம் பரிதாபமாகக் கத்திக்கொண்டிருந்தான் அறிவு.
அவனுக்கு அருகில் கிட்டண்ணை நின்றார். மற்றத் தோழர்கள் சற்றுத் தள்ளி நிலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அறிவு , வயதில் குறைந்தவன். ஒரு இடத்தில் நிற்காமல் எந்நேரமும் சுறுசுறுப்பாக நிற்கும் அவனுக்கு ஏற்ப்பட்ட அந்த நிலையை எவராலும் தாங்க முடியாமல் இருந்தது.
கிட்டண்ணைதான் அவனுக்கு அருகில் இருந்து அவனது தலையத் தடவிக்கொண்டிருந்தார்.
” ரஷ்யாவில் ஒரு விமானஒட்டி – நீ கேள்விப்பட்டிருப்பாய் , இரண்டு கால்களையும் இழந்த பின்பும் விமானம் ஓட்டினார் , சண்டைக்குப் போனார் ”
அறிவுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு கிட்டண்ணை சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் கண்கள் கலங்கிப் போயிருந்தன. முதன் முதலில் எம்மில் ஒருவன் கால்களை இழந்தபோதும் நாம் இப்படித்தான் அதிகமாகக் கலங்கினோம்.
விடுதலைப் போராட்டத்தின் வளர்ட்சியின் பொது நாங்கள் எத்தனை சம்பவங்களைச் சந்தித்திருக்கின்றோம் …. ? இயக்கத்தின் வளர்ட்சியுடனேயே அங்கங்களை இழந்த போராளிகளின் தொகையும் அதிகரித்தது.
கால்கள் … கைகள் … கண்கள் … இழப்புக்கள் துயரம் நிறைந்தவைதான். ஆனால் இந்த இழப்புகள் எதுவுமே எந்தப் போராளியின் நெஞ்சத்து உறுதியையும் குறைக்கவில்லை ; அவர்களின் போராட்ட நடவடிக்கைகளையும் இடை நடுவில் நிறுத்தவில்லை. இன்று அங்கமிலந்தவர்களில் பலர் இயக்கத்தின் முக்கியமான பொறுப்புகளில் செயற்படுகின்றார்கள்.
உறுதியின் வடிவம்
செல்வனும் இப்படிபட்டவந்தான். அம்பாறையில் ஒரு கிராமமான நிந்தவூர்தான் அவனது கிராமம். அவன் பொறி வெடி செய்வதில் திறமையானவன். ஆனால் , வழமையாக அந்நியர்களின் பாதங்களை இலக்கு வைத்து வெடிக்கும். பொறி வெடி இவனது கையில் வெடிக்கும் என்று , எவருமே எதிர்பார்க்கவில்லை.
சில நாட்களின் பின்பு – செல்வன் தனது நிலையை உணர்ந்து கொண்டான். அருகிலேயே இருந்து அதிகமாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லும் தோழர்களின் செயல் எதற்கு என்பது அவனுக்கு அப்ப்போது நன்றாக விளங்கியது. அவனால் பார்க்க முடியவில்லை மணிக்கட்டுக்குக் கிழே இரண்டு கைகலுமே இல்லை.
செல்வனின் துயரமான இந்த நிலையை தோழர்களெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தபோது , அவன் வித்தியாசமானவனாக இருந்தான்.
வாழ்வின் இறுதிக் கணம்வரை ஒளியை அவன் காண முடியாது ; அது அவனுக்குத் தெரியும். அது மட்டுமல்ல அவனால் எந்த வேலையையும் செய்யமுடியாதபடி கைகளையும் இழந்திருந்தான். இந்த நிலையில் அந்த நாடக்ளைப் பற்றிச் செல்வனே சொல்கின்றான்.
” மனித வாழ்க்கையில் செய்யமுடியாதது என்பது எதுவுமே இல்லை என்பதில் நான் நிறைய நம்பிக்கை உடையவன். எதற்கும் பழக்கபடுத்துவதர்க்குச் சிலகாலம் செல்கிறது. அந்த நாட்கள் தான் கடுமையான – துயரம் நிறைந்த நாட்களாகும். நானும் அப்படித்தான். பழகிய – அன்பான முகங்களைப் பார்க்க ஏங்கினேன். அது முடியாதது எனக்குத் தெரிந்தபோது தவித்தேன். ஆனாலும் தன்னபிக்கையை என்றுமே நான் கைவிடவில்லை. ”
எப்போதுமே செல்வன் தன்னம்பிக்கை நிறைந்தவந்தான். அது இந்தியர்கள் சென்று சில காலம் – அன்னைபூபதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடந்து கொண்டிருந்தன. மிதிவண்டி ஓட்டப் போட்டியில் செல்வனும் கலந்து கொண்டான்.
மட்டக்களப்பின் தார் வீதிகளில் போட்டியாளர்களின் மிதிவண்டிகள் பறந்தன. செல்வன் தோர்க்க விரும்பவில்லை , முடிவிற்கு இன்னும் சிலமைல்கள்தான் இருந்தது.
செல்வனின் மிதிவண்டியின் பின் சில்லு காற்றுப் போகத் தொடங்கியது … சிறிது நேரத்தில் , அவன் காற்றில்லாத மிதிவண்டியில் ஓடிக்கொண்டிருந்தான் … அந்தப் போட்டியில் செல்வன் முதலாவதாக வரவில்லை. ஆனால் அவனுக்குப் பின்னால் நாற்பது போட்டியாளர்கள் வந்தார்கள்.
தலைவர் செல்வனைச் சந்தித்து அன்றே அவனுக்கு ஒரு பணிகிடைத்தது. அவனது வியக்கத்தக்க மனவுறுதியைப் பார்த்த எமது தலைவர் அவனை உற்சாகப்படுத்தினார் ; ” தன்னால் தொடர்ந்து போராட முடியும் ” என்ற அவனது நம்பிகையை மேலும் வளர்த்தார் – அதற்க்கு வடிவமும் கொடுத்தார்.
” மக்களுக்கான எமது கருத்தரங்குகளில் – கூட்டங்களில் கலந்து கொள்ளும்படியும் – வைத்தியசாலைக்குச் சென்று காயமடைந்த எமது போராளிகளைச் சந்தித்து , அவர்களை தளர்ந்து போகவிடாமல் உற்சாகப்படுத்தும் படியும் , செல்வனுக்குச் சொன்னார்.
செல்வன் இப்போதெல்லாம் வைத்தியசாலைக்குப் போகிறான். காயமடைந்த தோழர்களுடன் கதைக்கின்றான். பெரும் பாதிப்பைச் சந்தித்தும் தளராமல் தங்கள் முன் நிற்கும் தோழனைப் பார்த்து , மற்றவர்கள் வியக்கின்றார்கள். அந்த வியப்பே அவர்களின் மனங்களில் நம்பிக்கைகளை விதைக்கின்றது.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு எதிர்காலக் கனவுடனேயே வாழ்கின்றான். இது எல்லா மனிதர்களிற்கும் பொதுமையானது. செல்வனிடம் அவனது எதிர்காலத்தைப் பற்றி கேட்டபோது …..
” எங்கள் போராளிகள் எவரும் தம் சொந்த வாழ்க்கையின் நலன்களை எதிர்பார்த்து வாழ்பவர்களில்லை நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போது ஒன்றும் நடந்துவிடவில்லை. கண்களும் கைகளும்தான் இல்லை. மனதில் உறுதி குறையவில்லை. காதும் வாயும் இருக்கிறது. என்னால் தொடர்ந்து போராட முடியும். நான் இப்போ எங்கள் கருத்தரங்குளுக்கும் கூட்டங்களுக்கும் செள்ளத்தொடங்கியுள்ளேன். என்னால் ஓரளவு மேடையில் நன்றாகப் பேசமுடிகின்றது. முன்னேறுவேன் என்றும் நம்பிக்கையோடு இருக்கின்றேன் ” என்று குறிப்பிட்டான். தொடர்ந்தும் போராட்டக் களத்தில் செல்வன் தன்னைத் தயார் செய்கின்றான்.
ஒருநாள் , யாழ் நகரின் பிரபல பாடகசாலை ஒன்றின் மாவீரர் நாள் நிகழ்ட்சிகள் நடந்து கொண்டிருந்தன. திரண்டிருந்த மாணவர்களிற்கும் – ஆசிரியர்களுக்கும் முன்பாக , மேடையில் ஒரு ஓரமாக இருந்த செல்வனை , எவருமே கவனிக்கவில்லை. அவன் வேருபட்டவனாகவும் தெரியவில்லை.
அவன் பேசத்தொடங்கினான் நீளக் காற்சட்டையின் பைகளிற்க்குள் – இரண்டு கைகளையும் , ஒழித்துக் கொண்டு ஓர் கறுப்புக் கண்ண்டாடியுடன் தமக்கு முன்னாள் நின்ற போராளியின் பின்னால் ஒரு நீண்ட கதை இருக்கின்றது என்பது அங்கிருந்தவர்கள் எவருக்குமே தெரியாது.
அவனது பேச்சு முடியும் நேரம் ” உங்களுக்கு முன்னாள் கறுப்புக் கண்ணாடியுடன் காற்சட்டைப் பைகளிற்க்குள் கைகளை வெளியே எடுக்காமலும் பேசிக்கொண்டிருக்கும் என்னைப் பார்க்க அதிசயமாக இருக்கும். மனதிற்குள் சாத்துவான் வெறுப்பாகவும் இருக்கும். உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லாமல் போவது சரியில்லை . ” என்று சொல்லிவிட்டு கைகளை வெளியே எடுத்துக் காட்டினான்.
” எனக்குக் கைகள் இரண்டும் இல்லை. என்னால் உங்களைப் பார்க்கவும் முடியாது ” என்றான்.
அவனுக்கு முன்பாக இருந்தவர்களின் இதயங்கள் அதிர்ந்தன. அந்தக் கூட்டத்தில் எழுந்த நெஞ்சை வருடும் வித்தியாசமான் சத்தமும் சலசலப்பும் , செல்வனுக்கு மக்களின் உணர்வுகளை விளக்கியது. எங்கோ – ஒரு போர்முனையில் தன அங்கங்களை இழந்துவிட்ட அந்தப் போராளி , இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடச் சொல்லி மற்றவர்களை வேண்டி நிற்கின்றான் என்பதை , அங்கு கூடி இருந்தவர்கள் விளங்கிக்கொண்டார்கள்.
தனால் இந்த நாட்டவர்களைப் போராட்டக் காலத்துக்கு அனுப்ப முடியும் என்று செல்வன் , உறுதியாக நம்புகின்றான்.
செல்வன் மட்டுமல்ல , அவனைப் போன்று பெரிய பாதிப்புகளைச் சந்தித்த ஒவ்வொரு போராளியும் தளர்ந்து விடாமல் , புதிய வழிமுறையில் போராடத் தன்னைத் தயாற்படுத்துகின்றான்.
இங்கு , தன் ஒரு கலை இழந்துவிட்ட மேஜர் சுரேஷ் ஆனையிறவுத் தாக்குதல் நடவடிக்கையில் கவச வாகனம் ஒன்றின் பாதுகாப்புப் பொறுப்பாளராகச் சென்று வீரச்சாவை சந்தித்தது. குறிப்பிடத்தக்கது.
உறுதியின் விளக்கமாக நிற்கும் செல்வனும் ஓர் ஏக்கத்துடன் இருக்கின்றான்.
” நான் விடுதலையை மிகவும் நேசிக்கின்றேன் சுதந்திரத் தமிழீழத்தில் நிற்கின்றேன் என்ற உணர்வுக்காக நான் காத்திருக்கின்றேன் ” எனச் சொல்கின்றான்.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments