Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதியுமான டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 24-ந்தேதி தொடங்கி நடைப்பெற்று வந்தது
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியால் ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை.

இதனால் முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

ஜேமி ஸ்மித் 89 ஓட்டங்களும் டக்கெட் 52 ஓட்டங்களும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 177 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

சாத் ஷகீல் அபாரமாக விளையாடி 134 ஓட்டங்கள் எடுத்தார்

அவருக்கு துணையாக 9-வது வீரராக களம் இறங்கிய நோமன் அலி 45 ஓட்டங்களும் 10-வது வீரராக களம் இறங்கிய சஜித் கான் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களும் சேர்க்க பாகிஸ்தான 344 ஓட்டங்கள் குவித்தது

.
இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 4 விக்கெட்டும், சோயிப் பஷீர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 77 ஓட்டங்கள் பின்னதங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இன்றைய 3-வது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியால் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.

இதனால் 112 ஓட்டங்களுக்கு அணி சுருண்டது.
ஜோ ரூட் அதிகபட்சமாக 33 ஓட்டங்களும அடித்தார்
பாகிஸ்தான் அணி சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

36 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 1 விக்கெட் இழந்து 37 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

2-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments