தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (26) யாழ் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
யாழ் நகர் பகுதியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் வாக்களிக்குமாறு கேட்டனர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், மிதிலைச்செல்வி பத்மநாதன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.