பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டை கடந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த போரில் இதுவரையான காலப்பகுதியில் குழந்தைகள், பெண்கள் அடங்கலாக 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் உள்ளனர்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது.
எனவே ஹிஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது
இஸ்ரேல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் என்றும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நீண்ட கால முயற்சிகள் வேகமடைவதால் போர் நிறுத்தம் ஏற்பட்டால் சண்டையை நிறுத்துவமாக ஹமாஸ் உறுதியளித்துள்ளது.