கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு போட்டியில் வட மாகாணத்திற்கு 4ஆவது தங்கப் பதக்கத்தை சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி வென்றெடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து அபிஷாலின தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் 3.01 மீற்றர் உயரம் பாய்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.