அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும்.
விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை.