ரவி செனிவிரட்ணவையும் ஷானி அபயசேகரவையும் எந்த காரணத்திற்காகவும் பதவியிலிருந்து நீக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவையும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவையும் பதவியிலிருந்து அகற்றப்போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
உள்நோக்கம் கொண்ட சக்திகள் இருவரும் பதவி நீக்கப்படுவதை விரும்புகின்றனர் எனவும் ஆனால் அரசாங்கம் அவர்களின் எண்ணங்களுக்கு பலியாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் உரிய விசாரணைகளின் பின்னர் குறித் அதிகாரிகள் குற்றமிழைத்தவர்கள் என நிருபிக்கப்பட்டால் அவார்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்காது என . அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்