மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண ஆளுநர்களுக்கு உத்தரவுட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதார மற்றும் கல்வி சேவைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பிலும் அக்கரை செலுத்தப்பட்டுள்ளது.
நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்தும் வகையில் சேவையை வழங்க மாகாண சபைகள் செயற்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து நடவடி;கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை அகற்றி தரமான அரச சேவைக்கு அர்ப்பணிக்குமாறு அனுரகுமார திஸாநாயக்க ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு காணிகள் மற்றும் மாகாண சபை நிதியின் பயன்பாடு தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் கந்தளாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதில் 9 மாகாணங்களின் ஆளுநர்களும் கலந்துக்கொண்டனர்.