இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தின் முக்கிய வேட்பாளர்களா எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரை சமாதானப்படுத்த முயற்சி நடக்கின்றது
சிவஞானம் சிறிதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கட்சிக்கு யார் தலைவர் என்பது தான் போட்டி
ஜனநாயகமாக சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பின் சுமந்திரன் கட்சியின் செயலாளர் பதவியை கோரினார்.
இதனையடுத்து எழுந்த பிரச்சினை தொடர்கின்றது
நீதிமன்ற இடைக்காலத் தடையால் சிறிதரனால் அப்பதவியில் நீடிக்க முடிந்திருக்கவில்லை.
இதனையடுத்து, இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தது
இவ்வாறான பின்னணியில் இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கட்சியின் துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஈடுபட்டார்.
முதற்கட்டமாக, இருவரையும் வேட்பு மனுத்தாக்கலின்போதும், வேட்பாளர் அறிமுக நிகழ்வின்போதும் ஒரே சமயத்தில் வர வைத்ததும் சமரச முயற்சி என்கிறது கட்சி வட்டாரம்
தேர்தல் பிரச்சார செயற்பாடுகளில் சுமந்திரனும் சிறிதரனும் தனித்தனியாகவே; ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.