Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என கனேடியப் பிரதமர் தெரிவிப்பு!

புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என கனேடியப் பிரதமர் தெரிவிப்பு!

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடிய வாழ் தமிழர்களும் இலங்கையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

அவ்வாறானவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் உரிமைகள் குழுவின் உறுப்பினர் கற்பனா நாகேந்திராவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ப்ரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி புலம்பெயர் சிங்களவர்களால் கவனயீர்ப்புப்போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் கனடாவில் வாழும் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கற்பனா நாகேந்திரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப பதிலளித்த பிரதமர் ட்ரூடோ, சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் தேவைப்படுவதாகக் தெரிவித்தார்

எது எவ்வாறாக இருந்த போதும் ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் ஏற்றுக்கொண்டுள்ளாhர்

எனவே புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவேண்டும் எனக் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments