இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்களின் அறிமுகநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது.எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம்.எமது மதத்தை அழித்து பௌத்தமதத்தை விஸ்தரிக்கவேண்டும்என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
பொலிஸ் இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது.
இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல் நடந்துக்கொள்கின்றது
பௌத்த மதத்திற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தினை காட்டும் நோக்கத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.
மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒருவருடத்தை கடந்தபின் தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று.
;சர்வதேசம் பாராமுகமாக இருக்கின்றது
இந்தியா பச்சோந்தி தனமாக நடந்துக்ககொள்கின்றது என து.ரவிகரன் குற்றம் சுமத்தினார்.