இந்தியக் கடற்படை சொந்தமான கப்பல் இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இலட்சத்தீவுகளில் ஒன்றான கல்பேனி தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த கப்பலானது கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுப்படப் பன்படுத்தப்பட்டு வருகின்றது.
இது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் அவை இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கப்பலின் பணியாளர்கள் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களைக் சுற்றி பார்க்கவுள்ளனர்.