நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெறுகின்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் விளையாடினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையாவை சந்தித்தார்.
இதில் படோசா 6-3, 6-2 என இலகுவாக வென்று அரையிறுதி சுற்றுக்குள் கால் வைத்துள்ளார்.