Friday, January 10, 2025
Homeமுக்கிய செய்திகள்ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என தமிழர் தரப்பு கோரிக்கை

ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என தமிழர் தரப்பு கோரிக்கை

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (9) முன்னெடுக்கப்பட்டது.

கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் நடத்தப்பட்டது

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள்,மனித உரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுத்துள்ளனர்

இந்த அகதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்

இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளைத் தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.

எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களைக் கொண்டு வரவேண்டும் என போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments