யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 50 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.