அன்னை , சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது
இன்று காலை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வு மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து அம்மையாரின் திருவுருவப்படம் தாங்கிய சிறப்பு ஊர்வலத்தை தொடர்ந்து அம்மையாரின் நினைவாலய வழிபாடு, உருவச்சிலைக்கான மரியாதையளித்தில் தொடர்ந்து மண்டப நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின
ஆசியுரைகளை மாவை ஆதீனம் முதல்வர் மகாராஜஸ்ரீ ச. இரத்தினசபாபதிக் குருக்கள், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பிரதமகுரு சிவஸ்ரீ. சு. செந்தில்ராஜக் குருக்கள்
நல்லை ஆதீனம் முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கியதோடு
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார்
சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, வலி-வடக்கு பிரதேச செயலர் திருமதி. சிவகெங்கா சுதீஸனர் கலந்துகொண்டார்.
விசேட நிகழ்வாக கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி நூற்றாண்டு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.
முதற்பிரதியை தெல்லிப்பளை. தேவஸ்தானம் தர்மகர்த்தா சபைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் புத்திஜிவிகள் பேராசியர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்> உரும்பிராயில் கூலித்தொழிலாளியை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்!