ரஸ்சிய இராணுவத்தில் வலிந்து இணைக்கப்படட உறவுகளை மீடக கோரியே சிங்கள பெண் ஒருவரும் தமிழ் பெண்கள் இருவரும் இணைந்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்
ரஸ்சிய்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக
ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், கொழும்பு வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ரஸ்சிள இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ள கணவருக்காக முல்லைத்தீவைச் சேர்ந்த அவரது துணைவியார் ஒருவரும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்
இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவின் பிரதானி போராட்டத்துக்கான காரணத்தினைக் கேட்டறிந்ததோடு, ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளரான கமகேவுடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த பணிப்பாளருடன் சந்திப்பை நடத்தினார்கள். அச்சந்திப்பின்போது ஏலவே டிசம்பர் மாதம் 2ஆம் திகதி கையளிக்கப்பட்ட குறித்த விடயம் சம்பந்தமாக கடிதத்துக்கு உரிய பதில்கள் கிடைக்காமையின் காரணத்தினாலேயே போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
அச்சமயத்தில் குறித்த விடயம் வெளிவிவகார அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதோடு அந்த அமைச்சே விடயத்தினைக் கையாள்வதாகவும் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டதோடு அவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிகளை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களை அழைத்து சந்திப்பை நடத்தியதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.