அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆறு நாட்கள் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, ஏழாவது நாளாக இன்று யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இக் கையெழுத்து போராட்டத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலரும் கையெழுத்திட்டனர்