கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணியால் இருவர் உயிரிழந்திருக்கலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்
இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
எனவே மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்