Wednesday, January 8, 2025
Homeசெய்திகள்யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் உள்ள நிதி நிறுவனங்களின் அடாவடி தொடர்கின்றது

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் உள்ள நிதி நிறுவனங்களின் அடாவடி தொடர்கின்றது

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தாக்க முனைந்த சம்வம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது

இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

குறித்த நிதி நிறுவனத்தில் தான் அடகு வைத்த நகைகளை மீட்க சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபரொருவர் தனது தேவைகளுக்காக களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார்.

அதன் பின்னர், அடகு வைக்கப்பட்ட தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் அந்த நபர் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை, செலுத்தவேண்டிய வட்டி மற்றும் முதல் பணத்தொகை தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதற்கு, அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டுவந்துள்ளதாக கூறி நகைகளை தருமாறு கேட்ட போது உங்களது நகைகளை தரமுடியாது; ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள்; இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும்; திங்கட்கிழமை தருகின்றோம்’ என கூறியுள்ளனர்.

அதற்கு நகை அடகுவைத்த நபர், தனக்கு அவசரமாக நகைகள் தேவை என கூறி நகைகளை கேட்ட போதே குறித்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் நகை அடகு வைத்தவரை தாக்க முனைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள் சில தங்க நகைகளை அடகு வைத்தவர்கள் மீட்க செல்கின்ற போது அது மூழ்கிவிட்டதாக தெரிவித்து ஏமாற்றிய சந்தர்ப்பங்கள் நடைப்பெற்றுள்ளது.

உங்களுக்கு கடிதம் அனுப்பினோhம் நீங்கள் மீட்கவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கடிதங்கள் அடகு வைத்தவர்களுக்கு கிடைக்கப்பெறவில்வையென பலரும் அழுது புலம்பி செல்கின்றனர்.

நகைகளை அடகு வைக்கும் போது ஒப்பமிடச்சொல்லும் இடங்களில் எல்லாம் ஒப்பமிடுவதால் சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

ஒப்பமிடும் பத்திரங்களில் இருக்கும் எழுத்துக்களும் மிகச்சிறியவை அத்துடன் அதனை வாசித்தும் விளங்கிக்கொள்ள முடியாத ஆயிரக்கணக்கானோர் உள்ளமை குறிப்பிடத்தக்கவை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments