நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் தனது பதவிக்காலம் முடிவடையும் வரை காத்திருக்காமல் புதியஅரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.