ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என பேராசிரியர் ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (5) மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை ஆற்றிய பேராசிரியர் ரகுராம் மேலுள்ளவாறு தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கபட்டோர் தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும்.
சமகாலத்தில் மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என பேராசிரியர் ரகுராம் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்