Wednesday, January 8, 2025
Homeஉள்ளூர்சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் ஆபத்தில்லையென்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர

சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் ஆபத்தில்லையென்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர

சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் ஆபத்தில்லையென்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர

சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று அல்ல அத்துடன் இது புதிய வைரஸும் அல்ல.

2001ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் குளிர்காலத்தில் சுவாச நோய்களை ஏற்படுத்துவதாகுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குளிர்காலத்தில் இவ்வாறான சுவாச நோய்கள் ஏற்படுவது வழமையானதாகும்.
அந்த வகையில் தற்போது சீனாவில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

இதன் அறிகுறிகளில் இருமல், சளி அல்லது மூக்கில் அடைப்பு, காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவை அடங்கும்.

கடுமையான சந்தர்ப்பங்களில் மூச்சுத் திணறல் அல்லது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவாக அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லையென தெரிவித்த அவர் சீனா அல்லது உலக சுகாதார ஸ்தாபனம் பொது சுகாதார அவசரகால நிலையை அறிவிக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்>தமிழர் பகுதியில் தந்தையும் மகனும் செய்த மோசமான செயல்..!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments