இந்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நீர் இறைக்கும் மோட்டரில் மின்கசிவு ஏற்பட்டமையால் 45 வயதுடைய குடும்பஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ; சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.