பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது
பா.ஜ.க. ஏகலைவனைப் போல் இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது.
அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்பட்டாலும் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை.
தேர்வுகள் நடத்தப்பட்டால் வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன. இளைஞர்கள் நீதி கோரும்போது அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது.
உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் சமீபத்திய போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேசத்தில் அரசு தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக போராடிய 2 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுவும் முதல் மந்திரியே அந்த மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த பிறகும் இது நடந்துள்ளது.
பா.ஜ.க. அரசு மாணவர்களின் நம்பிக்கையை உடைத்து, ஜனநாயக அமைப்பை முடக்கிவிட்டது.
மாணவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.
எந்த நிலையிலும் இளைஞர்களின் குரலை பா.ஜ.க. நசுக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
भाजपा भारत के युवाओं का बिल्कुल एकलव्य जैसा अंगूठा काट रही है, उनका भविष्य मिटा रही है।
— Rahul Gandhi (@RahulGandhi) January 3, 2025
सरकारी भर्ती में विफलता बड़ा अन्याय है। पहले तो भर्ती नहीं निकलती। भर्ती निकल जाए तो एग्जाम समय पर नहीं होते। एग्जाम हो तो पेपर लीक करवा दिए जाते हैं। और जब युवा न्याय मांगते हैं तब उनकी… https://t.co/k7zD2TrDB4
இதையும் படியுங்கள்>ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உலகின் மிக வயதான வீராங்கனை காலமானார்!