அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் ஒலிபெருக்கி அனுமதி பெற்று குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த கையெழுத்துப் போராட்டம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் மட்டும் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற ஏற்பாட்டாளர்கள் பொலிஸாருக்கு விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர் பொலிஸார் குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ள அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்கது