கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே
இந் நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (02) உயிரிழந்தார்.
குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் 34 வயதுடைய குறித்த குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.
குடும்பத் தலைவரும் மற்றொரு மகனும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில், விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரதேச மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.