சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.