வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந் நிலையில் மூன்று மாதகாலத்தில் வடமாகாண பிரதமசெயலாளரின் தலைமையில் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண பிரதிபிரதமசெயலாளர் எ.அன்ரன் யோகநாயகம் பதிலளித்துள்ளார்.
வவுனியாமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (02) நடைப்பெற்றது
இந்த குறித்த கூட்டத்திலேயே இவ்வாறு ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் பேசப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும், மேலதிகமாக உள்ள ஆசிரியர்களின் தரவுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது கோரினார்.
சில மாவட்டங்களில் ஆசிரியர்கள், மேலதிகமாகவும், சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் வெற்றிடமாகவும் இருப்பதற்கான காரணமென்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்