தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 7 ஆம் திகதி சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்வு திட்டம் குறித்து பேசுவதற்குரிய திகதியை முடிவு செய்யவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்தபட்சம் அவ்விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்