தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஸ் இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
15 வருடங்களாக ஆண்டனி தட்டிலை காதலித்து வந்த கீர்த்தி சுரேஸ் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் காதலை அறிவித்தார்.
ஆனால் கீர்த்தி சுரேஸ் காதல் குறித்து சில நண்பர்களுக்கு மட்டும் முன்பே தெரியும் என கூறியுள்ளார்.
இது குறித்து கீர்த்தி சுரேஸ் கூறியதாவது:-
என்னுடைய காதல் குறித்து யாருக்கும் தெரியாது.
என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரியும்.
திரை உலகை பொறுத்தவரை சமந்தா, ஜெகதீஸ் அட்லீ அப்புறம் விஜய் சாருக்கும் என கீர்த்தி சுரேஸ் தெரிவித்துள்ளார்