வெளிநாடுகளுக்கு புலம்பெயரந்து சென்றவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் ; சென்றவர்கள் அத்துடன் நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுறுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏலவே இது தொடர்பில் உத்தியோக பூர்வமான கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.