நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து கலந்துரையாடினார்
இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, நேபாள-இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பயணமாக டிசம்பர் 28 ஆம் திகதி நேபாளம் சென்றடைந்த ரயில் விண்ரமசிங்க, இன்று நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.